நீர்வளத் துறை மூலம் ரூ.1.13 கோடியில் ஏரியை புணரமிக்க பூமி பூஜை

ஏரியை புணரமிக்க பூமி பூஜை நடைபெற்றது.
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மட்டவெட்டு கிராமத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான பெரிய ஏரி சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியில் தற்போது நீர்வலத் துறை மூலம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் கரை பலப்படுத்துதல் புணரமைத்தல் மற்றும் மதகுகள் சரி செய்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.
இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கலசப்பாக்கம் தொகுதியானது முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகும் இந்த பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்டத்தின் அமைச்சர் எ.வ. வேலு ஆகியோரின் தீவிர முயற்சியில் நீர் வளத்தை பெருக்குவதற்காகவும் விவசாயிகளின் நலன் கருதியும் ரூ.1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக விவசாயிகள் என்னிடம் மனு கொடுத்து வருகிறீர்கள் அந்த ஆக்கிரமிப்பு யாரால் செய்யப்படுகிறது எந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தமிழக அரசுக்கு சொந்தமான ஏரியை முதலில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தால் அதனை கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தட்டிக் கேட்க வேண்டும்.
தற்போது ஒரு கிராமத்திற்கு புதிய பள்ளி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் அந்த கிராமத்தில் கட்டிடம் கட்டும் அளவிற்கு இடமில்லை என்று கைவிருக்கின்றனர். இந்த நிலை நீடிக்காமல் பார்த்துக் கொள்வது பொது மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது விழிப்புணர்வுடன் இருந்து அரசு சொத்துக்களை காப்பாற்றுங்கள் இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணலதா உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu