கலசபாக்கத்தில் புதிய துணை சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை

கலசபாக்கத்தில் புதிய துணை சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை
X

பூமி பூஜையை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன்

கலசப்பாக்கத்தில் புதிய அரசு சுகாதார நிலையம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கெங்காவரம் கிராமத்தில் ரூபாய் 35 லட்சத்தில் புதிய அரசு துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூமி பூஜைக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, கெங்காவரம் மக்களும் அதை சுத்தியுள்ள கிராம மக்களுக்கும் நாங்கள் அவசர சிகிச்சைக்காக செல்ல வேண்டுமென்றால் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கும் மேல் தொலைதூரம் சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது, எனவே இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் இந்த கிராமத்தில் 15வது நிதி குழு சார்பில் புதிய அரசு துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கு ரூபாய் 35 லட்சத்தில் இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு துணை சுகாதார நிலையத்தின் மூலம் நீங்கள் உங்கள் உடல் நலத்தை முழுமையாக பரிசோதனை செய்து ஆரோக்கியத்தை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளலாம் என எம் எல் ஏ கூறினார்.

நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் யூனியன் சேர்மன் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ரமேஷ், பஞ்சாயத்து தலைவர்கள் ராஜீவ் காந்தி, புஷ்பா செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள், அரசு அலுவலர்கள், சுகாதார நிலைய செவிலியர்கள், மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

கலசப்பாக்கம் சம்புவராயநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்அருகே சம்புவராயநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.சங்கத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஆனந்தன் வரவேற்றார்.

விழாவில் 5 மகளிர் குழுக்களுக்கு தனிநபர் கடனாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் துரை, நிர்வாக குழு உறுப்பினர்கள் துரை மாமது, விஜயரங்கன், பாஸ்கர், பாலமுருகன், சாந்தா, சிவகாமி, சுகந்தி, சுகுணா, சுஜாதா மற்றும் சங்க ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story