கலசப்பாக்கம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை
ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு பூமி பூஜை, தொடங்கி வைத்த எம்எல்ஏ சரவணன்
கலசப்பாக்கம் அடுத்த படாகம் ஊராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் மற்றும் படாகம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்கள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியத்தில், கீழ்படூர் - புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், ஒரவந்தவாடி- புதிய OHD குடிநீர் தேக்க தொட்டி, காஞ்சி - புதிய இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் & புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், பனைஓலைப்பாடி - புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் & நெல் கொள்முதல் நிலையம், தேவனந்தல் - சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீர் & புதிய நியாய விலை கட்டிடம், முன்னுர்மங்கலம் - புதிய நான்கு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் & புதிய நியாய விலை கட்டிடம், அமர்நாதபுதூர் - புதிய நியாய விலை கட்டிடம்,
முத்தனூர்- புதிய ஊராட்சி கிராம செயலக கட்டிடம், தொரப்பாடி - புதிய மின் மாற்றி, இறையூர் - புதிய ஊராட்சி கிராம செயலக கட்டிடம், ஆகிய முடிவுற்ற பணிகளை தலைமை செயற்குழு உறுப்பினரும், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான சரவணன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த படாதும் ஊராட்சியில் ரூபாய் 1.26 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு எம்எல்ஏ சரவணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இப்பகுதியில் நடைபெற்ற ஊராட்சி கட்டிடம் திறப்பு விழாவிற்கு நான் வந்தபோது இப்பகுதி மக்கள் இங்குள்ள மருத்துவமனை எங்களுக்கு சரியான படுக்கை வசதியும், சரியான இயற்கை வசதியும், மருத்துவ வசதியும் போதுமான இட வசதிகளும் இல்லை. மேலும் அவசர மேல் சிகிச்சைக்கு செல்வதற்கு இங்கிருந்து 15 கிலோமீட்டர் தூரம் சென்று நாங்கள் மருத்துவ ம் பார்க்க வேண்டி உள்ளது . அதனால் எங்களுக்கு புதிதாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த படாகம் ஊராட்சியில் தற்போது 15 வது நிதி குழு மானியத்தில் ஹெல்த் கிராண்ட் மூலம் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்து பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மக்களுக்காக இலவச பேருந்து பயணம், நடமாடும் மருத்துவமனை, மக்களை தேடி மருத்துவம், தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டையின் மூலம் குடும்பத்திற்கு தலா 5 லட்சத்தில் உடல் நலத்தை சரி செய்வதற்கு மருத்துவ காப்பீடு திட்டம் என பல திட்டத்தை தமிழக மக்களுக்காக வழங்கி உள்ளார்.
இதனை பொதுமக்களாகிய நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன், அன்பரசி ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu