குப்பைகளை அகற்ற கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் அளிப்பு
குப்பைகளை அகற்ற கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்களை எம்எல்ஏ வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகளுக்கு 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 98 லட்சத்தில் 37 குப்பை அகற்ற பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பேட்டரி வாகனம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையா் கோபு முன்னிலை வகித்தாா். தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் சீனுவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா ஆகியோா் வரவேற்றனா்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் கலந்து கொண்டு 37 வாகனங்களை ஊராட்சித் தலைவா்களிடம் வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசும்பொழுது,
நமது தூய்மை பணியாளர்கள் தொலைதூரம் சென்று மிதிவண்டியில் குப்பைகளை அகற்ற அவர்கள் தொலைதூரம் சென்று வருவதின் சிரமங்களை என்னிடம் கூறினார்கள் . அதை தொடர்ந்து அவர்களின் சிரமத்தை குறைக்கவும் விரைவாக தூய்மை பணிகள் நடைபெறவும் முடிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக 37 பேட்டரி வண்டிகளை வழங்கி இருக்கிறோம். இந்த நவீன பேட்டரி வண்டிகள் மூலம் தூய்மை பணியாளர்கள் விரைந்து குப்பைகளை அகற்றுவீர்கள் என நம்புகிறேன், மேலும் நமது கிராமத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சுத்தமாக வைத்திருக்க முழுமையாக செயல்படுவோம் என கூறினார்.
நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பவ்யா ஆறுமுகம், முனியப்பன், ஊராட்சித் தலைவா்கள் ஜெயராஜ், சுந்தரம், திருமலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , ஒன்றிய துணைச் செயலாளர்கள் , பஞ்சாயத்து தலைவர்கள் , துணைத் தலைவர்கள் , அரசு அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu