குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
X

குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் எஸ்பி பவன்குமார் உரையாற்றுகிறார்

ஜமுனாமரத்தூரில் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு திருவண்ணாமலை எஸ்பி அறிவுரை

இன்று 25.08.2021- ம் தேதி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ஜமுனாமரத்தூர் பொதுமக்களிடையே குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தும், சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்த கூடாது என்றும், சட்டவிரோத நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரையை வழங்கினார்.

மேலும் ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 சிறப்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

முன்னதாக ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் மரக்கன்றை நட்டு வைத்து, மரம் நடுவதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஜமுனாமரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!