கலசபாக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம்: ஆலோசனை கூட்டம்

கலசபாக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம்: ஆலோசனை கூட்டம்

கலசபாக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம்,  பைல் படம் 

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் தொடங்குவதற்கு உண்டான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலைமாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் தொடங்குவதற்கு உண்டான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சிகள் மண்டல பொறுப்பாளர் திருமால், தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது மண்டல பொறுப்பாளர் பேசுகையில்,

கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ 3,53,000 வழங்கப்பட உள்ளது. அதில் ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி வீடு கட்டுவதற்கு உண்டான இடம் இருக்க வேண்டும். அதேபோல் கட்டாயம் கூரை வீடு, ஓட்டு வீடு, சீட்டு வீடு, போன்ற வீடுகள் மண் சுவற்றில் இருக்க வேண்டும். ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்ட சீட்டு வீட்டிற்கும் வழங்கப்படும்.

மேலும் கூரை வீடு, ஓட்டு வீடு, ஆகிய வீடுகளுக்கு கட்டாயம் கணக்கெடுக்கப்படும் அதுவும் குறிப்பாக மண் சுவராக இருக்கவேண்டும். அதன்படி வீடுகள் கணக்கெடுத்து புதிய பட்டியல் தயார் செய்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் மக்களுக்கு வீடு வழங்க வேண்டும். அதேபோல் கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தில் உண்டான பட்டியலும் தயாராக உள்ளது. அதன்படியும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கப்படும். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திலும் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன்படியும் அரசு வழங்கும் வீடு வழங்கப்படும் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழக மக்களுக்காக கிராமங்களை வளர்ச்சிக்கான கிராமமாக மாற்றுவதற்கு தமிழக முதல்வர் மஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்.

அதில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், பிரதம மந்திரி வீடு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் கிராமங்களை குடிசை இல்லா கிராமமாக மாற்றுவதற்கு ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. அதனால் உண்மையான பயனளிகளுக்கு கட்டாயம் வீடு கிடைக்க வேண்டும் அதனால் விருப்பு வெறுப்பு பாராமல் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) மண்டல பொறுப்பாளர் திருமால், கூறினார்.

இந்நிகழ்வில் வருவாய்த்துறை துறையினர் , கலசபாக்கம் வட்டாரத்தில்உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய பொறியாளர்கள், மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story