புதுப்பாளையம் ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அண்ணாதுரை எம்பி
பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அண்ணாதுரை எம்பி
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற திருவண் ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த அனைத்து பொதுமக்களுக்கும் கிராமம் கிராமமாக சென்று சி.என். அண்ணாதுரை எம்.பி, நன்றி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அண்ணாதுரை எம்.பி, நேற்று மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு கிராமம் கிராமமாக சென்று நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயந்தி லட்சுமணன் (எ) சீனு, அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்,
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களை தேடி சென்றடைகிறது அதேபோல் தமிழக மக்களுக்காக வழங்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்கிறது. மேலும் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக வழங்கி வருகிறார். அதேபோல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் விடுபட்ட பைனாளிகளை பரிசீலனை செய்து விடுபட்ட அனைத்து உண்மையான பயனளிகளுக்கும் கட்டாயம் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.
அதேபோல் வரும் மாதத்தில் இருந்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ 1000 வழங்குவதற்கு தமிழ் புதல்வன் என்ற திட்டத்தில் மாதமாதம் ரூ 1000 வழங்கப்பட உள்ளது . மேலும் கலசபாக்கம் தொகுதியை தன்னிறைவற்ற தொகுதியாக மாற்றப்படும் அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராகிய நானும் கலசபாக்கம் தொகுதியைதண்ணிரைவற்ற தொகுதியாக மாற்றுவதற்கு முழுமையாக செயல்படுவோம்.
மேலும் இந்த காரப்பட்டு ஊராட்சியில் ஒரு உயர்மட்ட பாலம் வேண்டும் என்று எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளீர்கள் . அந்த கோரிக்கை பரிசோதனை செய்து இந்த ஊராட்சிக்கு புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு தயாராக உள்ளது விரைவில் இந்த காரப்பட்டு ஊராட்சியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். அதேபோல் சாலைகள் அமைக்கவேண்டி கோரிக்கைவைத்துள்ளீர்கள், விரைவில் அனைத்து சாலைகளும் தரமாக அமைத்துக்கொடுக்கப்படும். இதுபோல் பல்வேறு வளர்ச்சி பணிகள் சாலை அமைத்தல் தடுப்பணை மற்றும் மேம்பாலம், பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், ஊராட்சிமன்ற அலுவலகம் என ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கலசபாக்கம் தொகுதி வளர்ச்சி தொகுதியாக மாறும் என பொதுமக்களுக்கு நன்றி கூறி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள், அணி அமைப்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிளைச் செயலாளர் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu