திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலசபாக்கத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கலசப்பாக்கம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் மேரி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடைத்தொகை ரூபாய் 10 லட்சமும் உதவியாளர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்க வேண்டும்.
மே மாத விடுமுறை ஒரு மாதமாக விட வேண்டும் ,மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.
செங்கம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் தஹஜிம் பானு தலைமையில் தமிழக அரசுக்கு மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் தழுவிய நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி காலி பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்பிட வேண்டும், அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 2000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது . இனி வருங்காலங்களில் அதனை உயர்த்தி 9000 ஆக வழங்க வேண்டும், வேலை பலுவை குறைக்க வேண்டும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் , அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும்,
கிரேடு 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக நியமித்து குறைந்தபட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு ரூ:26000 உதவியாளர்களுக்கு ரூ:21000 வழங்க வேண்டும். . மேலு ம் காலிப்பணியிடங்களை நிரப்புதல், உள்ளூர் பணியிட மாறுதல், 10 வருடங்கள் பணி முடித்த உதவியாளர்களுக்கு பணியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu