அதிமுக வேட்பாளர் அதிரடி பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர் அதிரடி பிரச்சாரம்
X
இந்த தேர்தல் தான் திமுகவிற்கு கடைசி தேர்தலாக இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் அதிரடி பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாளுர், மேல்பாளுர், மட்டவெடடு உள்ளிட்ட பகுதிகளில் கலசப்பாக்கம் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.

மறைந்த ஜெயலலிதா அவர்கள் அளித்த வீட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிப்போம் என்று கூறி அதனை நிறைவேற்றியுள்ளதாகவும், இதன் மூலம் கோபாலபரத்தில் உள்ள கலைஞர் வீட்டுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொன்னபடி இந்த அதிமுக இயக்கம் 100 ஆண்டுகள் தமிழகத்தினை ஆளும் இயக்கமாக இருக்கும் என்றும், இந்த தேர்தல் தான் திமுகவிற்க்கு கடைசி தேர்தலாக இருக்கும் என்றும், பொது மக்கள் நீங்கள் திமுகவிற்க்கு சம்மட்டி அடி கொடுத்து விரட்ட வேண்டும் என்றும் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் பொது மக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
ai marketing future