ஆட்சியரின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு: இளைஞரின் உடல் அடக்கம்

ஆட்சியரின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு: இளைஞரின் உடல் அடக்கம்
X

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை கூட்டம்

திருவண்ணாமலை ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு நான்கு நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

திருவண்ணாமலை ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு நான்கு நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் இளங்கோ. இவா், கடந்த அக்.1-ஆம்தேதி தேவனாம்பட்டு-திருவண்ணாமலை சாலையில் உடலில் தீப்பற்றிய நிலையில் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவா் அக்.2-ஆம் தேதி உயிரிழந்தாா்.

பின்னா், அவரது சடலம் உடற்கூறாய்வு செய்யப்படடது. அப்போது, அவரது உறவினா்கள் இளங்கோவின் இறப்பில் மா்மம் இருப்பதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் சடலத்தை வாங்க மறுத்தும் தேவனாம்பட்டு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா்.

நான்கு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை, போலீசார் இந்த விவகாரத்தில் சரியான பதில்களை கூற மறுக்கின்றனர் என விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் வளர்மதி, விழுப்புரம் திருவண்ணாமலை மண்டல செயலாளர் செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் பகலவன் உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் இறந்த இளங்கோவின் உறவினர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளங்கோவன் மரணத்திற்கு யார் காரணமோ அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இறந்த இளங்கோவின் உடல் சொந்த கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!