வளர்ச்சி மிகுந்த தொகுதியாக கலசப்பாக்கம் மாற்றப்படும்: எம்பி பேச்சு

வளர்ச்சி மிகுந்த தொகுதியாக கலசப்பாக்கம் மாற்றப்படும்: எம்பி பேச்சு
X

கலசப்பாக்கத்தில் நன்றி தெரிவித்து பொதுமக்களிடம் பேசிய அண்ணாதுரை எம்பி

கலசப்பாக்கம் வளர்ச்சி மிகுந்த தொகுதியாக மாற்றப்படும் என எம்பி அண்ணாதுரை கூறினார்.

கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த அனைத்து பொதுமக்களுக்குக்கும் கிராமம் கிராமமாக சென்று அண்ணாதுரை எம்பி நன்றி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அண்ணாதுரை எம்பி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு கிராமம் கிராமமாக சென்று நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட பிரதிநிதி சின்னதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்,

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களைதேடி சென்றடையும் அதேபோல் தமிழக மக்களுக்காக வழங்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக வழங்கி வருகிறார்.

அதேபோல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் விடுபட்ட பயனாளிகளை பரிசீலனை செய்து விடுபட்ட அனைத்து உண்மையான பயனாளிகளுக்கும் கட்டாயம் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும், வரும் மாதத்தில் இருந்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ 1000 வழங்குவதற்கு தமிழக புதல்வன் என்ற திட்டத்தில் மாத மாதம் ரூ 1000 வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் கலசப்பாக்கம் தொகுதியை தன்னிறைவற்ற தொகுதியாக மாற்றப்படும் அதற்காக முதலமைச்சர் மு . க . ஸ்டா லி ன் , பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நாடாளுமன்ற உறுப்பினராகிய நானும் கலசப்பாக்கம் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றுவோம் என்று கூறினார். மேலும் கலசப்பாக்கம் தொகுதிக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும், வளர்ச்சி பணிகளும், சாலை வசதிகள் மற்றும் கட்டுமான பணி போன்ற அனைத்து வசதிகளும் உடனுக்குடன் அமைத்து வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மக்களிடம் நன்றி கூறிய போது கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வித்யா பிரசன்னா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள், அவைத் தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் , மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய துணை செயலாளர்கள், நகர செயலாளர் சௌந்தர்ராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ரூ.2 கோடி மோசடி..! துணை தாசில்தாரை ஏமாற்றிய சென்னை வாலிபர் கைது..!