கலசப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி படிவம் வழங்கும் நிகழ்ச்சி
கலசப்பாக்கத்தில் நடந்த பூத் கமிட்டி படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் பூத் கமிட்டி படிவத்தை வழங்கி, அ.தி.மு.க. ஆட்சியில் செய்த நன்மைகள் பற்றி மக்களுக்கு எடுத்து கூறி பூத் கமிட்டி படிவத்தை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள கடலாடி, தென்மாதிமங்கலம், கீழ்பாலூர், மேல் சோழங்குப்பம், ஆதமங்கலம் புதூர், கேட்டவரம் பாளையம், ஐயம்பாளையம், காந்தபாளையம் உள்ளிட்ட பல ஊராட்சிகளில் பூத் கமிட்டி படிவத்தை வழங்கியுள்ளோம்.
இந்த கமிட்டி படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து வரும் 14ஆம் தேதிக்குள் அனைத்து படிவத்தையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் நாம் ஒப்படைக்க வேண்டும்.
அவரிடம் திருவண்ணாமலை மாவட்ட கழக பணியை சிறப்பான முறையில் செயல்படுகிறது என்ற நல்ல பாராட்டையும் பெற வேண்டும். அதற்காக கழகப் பணியை நாம் அனைவரும் அயராமல் செய்வோம் என்றார்.
மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு திருமண உதவி ரூபாய் 50000 , தாலிக்கு தங்கம் வழங்கியது அ.தி.மு.க. ஆட்சி தான். பொது மக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு எங்கும் அலையக்கூடாது என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் 2000 மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்
அதன் மூலம் பகுதி மக்கள் அருகில் உள்ள மக்கள் அனைவரும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
அதேபோல் சத்துணவு திட்டத்தையும் கொண்டு வந்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான். இந்த திட்டமும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் துவக்கப்பட்டது. குடும்ப அட்டைக்கு இலவச அரிசி வழங்கியது அ.தி.மு.க. ஆட்சி தான்
விவசாய கடன் அதிகளவு தள்ளுபடி செய்ததும் நமது அ.தி.மு.க. ஆட்சி தான். அதேபோல் மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்காக 14 வகையான நல திட்ட உதவிகளை வழங்கியதும் அ.தி.மு.க. ஆட்சி தான்,அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள், அதிகமான திட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் , மாவட்ட அனைத்து பிரிவு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu