ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு மோதிரம் பரிசு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு மோதிரம் பரிசு
X

மருத்துவமனையில் பெண் குழந்தைக்கு மோதிரம் அணிவித்த சரவணன் எம் எல் ஏ

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு எம்எல்ஏ மோதிரம் பரிசாக வழங்கினார்.

படவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்த இரண்டு நாட்களில் முதல் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததை யொட்டி சரவணன் எம்எல்ஏ தாயும் சேயும் நலம் விசாரித்து அவர்களுக்கு நினைவு பரிசாக மோதிரத்தை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள பத்தியவாடி மற்றும் நவாப்பாளையம் ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட 2 துணை சுகாதார நிலையங்களை இரு தினங்களுக்கு முன்பு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்டபோளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள படவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்த இரண்டு நாட்களில் முதல் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததை யொட்டி கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , தாயும் சேயும் நலமா என்பதை விசாரித்து அவர்களுக்கு நினைவு பரிசாக மோதிரத்தை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்டபோளூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று படவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்த இரண்டு நாட்களில் ஒரு பெண்மணிக்கு முதல் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் அறிந்து சரவணன் எம்எல்ஏ நேற்று தாயும் சேயும் நலமா என்று விசாரித்து அவர்களுக்கு நினைவு பரிசாக மோதிரத்தை வழங்கினார். அத்துடன் ஊட்டச்சத்து பெட்டகம் பிரசவ கிட் பாக்ஸ் ஆகியவை வழங்கி, இங்கு வரும் மக்களுக்கு சரியான முறையில் சிகிச்சை பார்த்து இன்னும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கவேண்டும் என்று மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் அறிவுறுத்தினார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கூறுகையில், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பத்தியவாடி மற்றும் நவாப்பாளையம் ஊராட்சிகளின் நான் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது இப்பகுதி மக்கள் என்னிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்தனர். முதல் கோரிக்கையாக பகுதி நேர ரேஷன் கடை வேண்டும் என்றும் எங்கள் பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது புதிய துணை சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறலாம், அது மட்டும் இல்லாமல் இந்த துணை சுகாதார நிலையத்திலே பாம்பு கடி மற்றும் நாய் கடி மருந்துகள், இங்கேயே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய செயலாளர் சேகர், வட்டார மருத்துவ அலுவலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!