அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த மக்கள் நல பணியாளர் உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த  மக்கள் நல பணியாளர்  உயிரிழப்பு
X
கலசபாக்கம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மிதித்த மக்கள் நல பணியாளர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காம்பட்டு பல்ல தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 52), இவர் மக்கள் நல பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று இவர் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது நிலத்தில் மின்சார கம்பத்தில் இருந்து ஒரு கம்பி அறுந்து நிலத்தின் வரப்பின் மீது விழுந்து கிடந்தன. அந்த மின் கம்பியில் மின்சாரம் சென்று கொண்டிருந்ததை பார்க்காமல் சக்கரவர்த்தி மின்கம்பியை மிதித்துள்ளார்.

உடனடியாக மின்சாரம் தாக்கி சக்கரவர்த்தி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து சக்கரவர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா