/* */

கலசப்பாக்கம் அருகே மரத்தில் பைக் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே மரத்தில் பைக் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கலசப்பாக்கம் அருகே மரத்தில் பைக் மோதிய விபத்தில்  போலீஸ்காரர் உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் குமாரசாமி காலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவா (வயது29). பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று தேவா திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக சென்றார். பின்னர் பணி முடிந்து இன்று அதிகாலை வீட்டிற்கு செல்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து களம்பூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு அருகே அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த தேவா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தேவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது போலீஸ்காரர் இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்னொரு சம்பவம்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் பெரணமல்லூர்அடுத்த மகாதேவிமங்கலம் கிராமத்தில் உறவினர் இறந்ததை தொடர்ந்து காரிய நிகழ்ச்சிக்காக மகாதேவி மங்கலத்துக்கு வந்தார். பின்னர் அவர் மதுஅருந்திவிட்டு திரும்பிய போது கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரணமலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இருந்து ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 6 Feb 2023 11:11 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!