துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு
அரசின் நேரடி நெற்கொள்முதல் நிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்காக துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் தற்போது உள்ள இக்கட்டிடம் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள காரணத்தால் இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளன.
இதனால் தற்போது ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியிலிருந்து ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் 2 மாடி உடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நேற்று துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றன.
இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.சரவணன் ஆகியோர் நேரில் வந்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
துரிஞ்சாபுரம் ஒன்றியம் நார்த்தாம்பூண்டியில் அரசின் நேரடி நெற்கொள்முதல் நிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்காக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி , அவர்கள் திறந்து வைத்தார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்த லைவர் பாரதி ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஒன்றிய உதவி பொறியாளர்கள் தனவந்தன், அருணா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu