கல்பாக்கம் அருகே கோமாரி நோய் பாதிப்பால் 25 பசு மாடுகள் பலி
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம், புதுப்பாளையம் மற்றும் துரிஞ்சாபுரம் ஆகிய ஒன்றியங்களில், 15 நாட்களுக்கும் மேலாக கோமாரி நோய் ஏற்பட்டு பசுமாடுகளுக்கு, கால் மற்றும் வாய்களில் புண் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த அலங்காரமங்கலம், பத்தியவாடி, பெரியகாலர், காம்பட்டு, பாடகம், கடலாடி மற்றும் பல்வேறு கிராமங்களில் உள்ள, 25-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் கோமாரி நோயினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இறந்தன.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் நோய் பரவல் அதிகமாகி பெரும்பாலான மாடுகள் பாதிப்பு ஏற்பட்டு இறந்து வருகின்றன.
மேலும், கால்நடை மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ வசதி மற்றும் கால்நடை மருத்துவர்கள் இல்லாத காரணத்தாலும், நோய் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu