அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
X

கலசப்பாக்கம் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை மாற்றக் கோரி அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதரவாளர்கள் 20 பேர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தலைமை அறிவித்த பன்னீர்செல்வத்தை மாற்றக் கோரியும் 20 ஆண்டு காலமாக அதிமுகவிற்கு பணியாற்றி வந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசுவை அறிவிக்க கோரி கலசப்பாக்கம் தொகுதி அதிமுக இணை செயலாளர் முருகேசன் தலைமையில் சுமார் 20 பேர் ஆண்கள் மற்றும் பெண்கள் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை மாற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையால் திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதில் தமிழக விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் பரமசிவம் மாவட்ட பொருளாளர் துரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
future ai robot technology