திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்கள் தொடங்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்கள் தொடங்க அழைப்பு
X

திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் பா.முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தில் கீழ் சிறு நிறுவனங்கள் தொடங்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் மூலம் 130 மணிலா நாட்டு மரசெக்கு எண்ணெய் உற்பத்தி மையம் தொடங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தை கடந்த 2020-21-ம் நிதியாண்டில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில், மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளைபொருட்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலமாக, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 'மணிலா நாட்டு மரசெக்கு எண்ணெய் உற்பத்தி' செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம்.

வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். 2021-22-ம் நிதியாண்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 130 உற்பத்தி மையம் தொடங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையத்தை தனி நபர்களும், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் திட்ட அலுவலரை மகளிர் சுய உதவிக் குழுக்களும், வேளாண் வணிகத் துறை துணை இயக்குநரை உழவர் உற்பத்தியாளர்களும் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், முன்னோடி வங்கி மேலாளர், வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!