உர மூட்டைகளை புதிய விலைக்கு விற்றால்?: வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை

மாதிரி படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்த, சில்லரை உரம் விற்பனை நிலையங்கள் மற்றும் குடோன்களில் சென்னை வேளாண்மை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் (உரங்கள்) சோபா ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பழைய விலையில் உள்ள உரங்களின் இருப்பு மற்றும் கடந்த 8-ந் தேதிக்கு பிறகு உயர்த்தப்பட்ட விலையில் உள்ள உரங்களின் இருப்புகள் எவ்வளவு உள்ளது, உரம் விற்பனை மையங்களில் உரம் மூட்டைகள் அரசு நிர்ணயித்த விலையில் வினியோகம் செய்யப்படுகிறதா, பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவி மூலம் உரம் விற்பனை செய்யப்படுகிறதா, உர விற்பனை நிலையங்களில் உரிமங்களின் காலாவதி நாள், கொள்முதல் செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து அவரது தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், வேளாண்மை அலுவலர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்கள், உர கிடங்குகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். விற்பனை நிலையங்களில் உரங்களின் விலைப்பட்டியலை தெரியும்படி வைக்க வேண்டும். இருப்பில் வைத்திருக்கும் பழைய விலையில் உள்ள உர மூட்டைகளை விவசாயிகளுக்கு புதிய விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. மீறினால் உரக்கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் உர உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார்.
கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனா (தகவல் மற்றும் தரகட்டுப்பாடு) விஜயகுமார், வேளாண்மை அலுவலர்கள் அற்புதசெல்வி, சோபனா, பிாியங்கா, வேளாண்மை உதவி இயக்குனர், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu