நவம்பர் 30, விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

நவம்பர் 30, விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலையில் நவம்பர் 30ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 30ஆம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை விவசாயம் சார்ந்து துறைகளான தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம், கால்நடைத்துறை, கூட்டுறவு, வருவாய் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகள் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்து, தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன்பெறலாம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!