ராணுவ ஆள்சேர்ப்பு பொது நுழைவுத் தேர்வு குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு

ராணுவ ஆள்சேர்ப்பு பொது நுழைவுத் தேர்வு குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு
X

திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் பா. முருகேஷ்

ஜூலை மாதம் 27 ஆம் தேதி அன்று சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பொது நுழைவுத் தேர்வு அனுமதி அட்டைகளை பெறுவதற்கான அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் நடை பெற்றது.

இதில் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24,000 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, உடற் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பொது நுழைவு தேர்வு வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி அன்று சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

அதன்படி புதிய அனுமதி அட்டைகளை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை, என்ற முகவரியில் ஜூலை 1ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் பா. முருகேஷ், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future