திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு
X

திருவண்ணாமலை நகராட்சி 10வது வார்டு கவுன்சிலராக கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 4 நகராட்சிகள் 10 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. 4 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 10 பேரூராட்சி அலுவலகங்களில் விழா நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உறுதிமொழியை ஏற்று உறுப்பினர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் பதவியேற்றனர்.

திருவண்ணாமலை நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன் , எம்பி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போளூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தல் அலுவலர் முகமது ரிஜ்வான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சேத்துப்பட்டு பேரூராட்சி 18 வார்டு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திர பாபு தலைமையில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்கள்..

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!