/* */

செய்யாறு அரசு கல்லூரியில் அக்.6, 7 ல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

செய்யாறு அரசு கலைக்கல்லூரியில், வரும் 6ம் தேதி இளநிலை அறிவியல் பாட பிரிவுகளுக்கும்; 7ம் தேதி கலைப்பாட பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

செய்யாறு அரசு கல்லூரியில் அக்.6, 7 ல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகின்ற 6 மற்றும் 7 தேதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி, 6ம் தேதி இளநிலை அறிவியல் பாட பிரிவுகளுக்கும், 7ம் தேதி கலை பாட பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சேர்க்கை உறுதியில்லை. அரசு நெறிமுறைகளின்படி மாணவர்களின், இன வாரியாகவும், மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வர் கலைவாணி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்போது, ஆன்லைனில் பதிவு செய்த மற்றும் பெற்றோரின் கையொப்பம் பெற்ற விண்ணப்பம் அசல், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 11ம் மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அதில் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்றிருத்தல் வேண்டும். ஆதார் அட்டை ஆகிய அனைத்து சான்றிதழ்களின் மூன்று நகல்கள், 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும்.

சேர்க்கைக்கு வரும் மாணவர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கல்லூரிக்கு உள்ளே நுழையும் போது கைகளைக் கழுவ வேண்டும், மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென, என கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Updated On: 4 Oct 2021 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்