திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
X

கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை கலெக்டர் இன்று துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை நகராட்சி, தேரடி வீதி இராஜகோபுரம் எதிரில் இன்று (01.08.2021) கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி,திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சந்திரா. வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர், அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு, பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொரோனா விழிப்புணர்வு புகைப்படம் பொதுமக்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டு, பலூன்கள் பறக்கவிட்டார்.

இதனை தொடர்ந்து, அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறும் படங்கள் திரையிட்டு காட்டப்படுவதையும், தேரடி வீதியில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேரடி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள், வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள், கடைகள், பூ மார்கெட் உள்ளிட்ட இடங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அனைவரிடமும் அரசு வழிகாட்டு நடைமுறைகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கை கழுவுதல் குறித்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியதாவது 'கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம்

பாதிக்கப்பட்டு, பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கும் மேலாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய நோயான கொரோனாவிலிருந்து பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றுவது தான் முக்கியம். இதற்காக அரசு பல்வேறு வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது, ஆனால் பொதுமக்கள் அதனை சரியாக கடைபிடிக்கவில்லை.

முகக்கவசம் சரியாக அணிய வேண்டும், இரண்டு முகக்கவசம் அணிந்தால் கூடுதல் பாதுகாப்பு, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், சானிடைசர், சோப்பு கொண்டு கைகழுவ வேண்டும். தற்போது பெரும்பான்மையான பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை சரியாக கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாக அருகில் உள்ள மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேற்றைய தினம் சென்னையில் கொரோனா விழிப்புணர்வு ஒரு வாரம் நடைபெறும் நிகழ்ச்சிகள் துவக்கி வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 01.08.2021 முதல் 07.08.2021 வரை ஒரு வாரம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் தற்போது தடுப்பூசி செலுத்தும் முகாம் உங்கள் வீடுகளின் அருகில் நடைபெற்று வருகிறது. மேலும், வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 15 நாட்களில் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலதுதிக் கொள்ள வேண்டும். செப்டம்பர் இறுதியில் கொரோனா மூன்றாவது அலை வரும் என எதிர்பார்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்