செய்யாறில் முழுமை பெறாத சிறு பாலம் பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி

செய்யாறில் முழுமை பெறாத சிறு பாலம் பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
X

செய்யாறில் சேதமடைந்துள்ள சாலை

செய்யாறில் சிறு பாலம் அமைக்கும் பணி முழுமை பெறாததால், பாலத்தை ஒட்டி சாலையில் ஏற்பட்ட பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நகராட்சி சார்பில் கோபால் தெரு பைபாஸ் சாலை சந்திப்பில் பல வருட கோரிக்கைக்குபின் சிறுபாலம் அமைக்கப்பட்டது. அந்த சிறுபாலத்தை ஒட்டி சாலையை இணைக்காமல் விட்டுவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முரம்பு மண் கொட்டி ஓரளவிற்கு சீர் செய்தனர். கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் சிறுபாலத்தை ஒட்டி சாலை பகுதியில் இருந்து மண் அரித்துச்செல்லப்பட்டு அங்குள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.

இதனால் அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுபற்றி கோபால் தெரு மக்களும், கொடநகர் பகுதி மக்களும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக கோபால் தெரு பைபாஸ் சாலை சந்திப்பில் சிறு பாலத்தை ஒட்டியுள்ள சாலையை சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!