விவசாயிகள் திட்ட முகாமில் கொரோனா விதி மீறல்; வேளாண் அதிகாரிகள் அலட்சியம்

விவசாயிகள் திட்ட முகாமில் கொரோனா விதி மீறல்; வேளாண் அதிகாரிகள் அலட்சியம்
X

கொரோனா கட்டுபாடுகளை மீறி கூடிய விவசாயிகளுக்கான முகாம்.

செங்கம் அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் கொரோனா நடைமுறை கடைபிடிக்காமல் விவசாயிகள் கூட்டம் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் வேளாண்மை துறை உழவர் நல துறை மற்றும் தோட்டக்கலை துறை இணைந்து, விவசாயிகளுக்கான சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ஆவணங்கள் பெரும் முகாம் தோட்டக்கலை சார்பில் நடைபெற்றது. இந்த முகாமில் புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அப்போது விவசாயிகள் முகக்கவசம் அனியாமலும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூடி இருந்தனர். அதிகாரிகளின் மெத்தனபாேக்கால் அரசு விதியை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இதனால் கொரோனா மூன்றாம் அலை எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசலை ஏற்படுத்தி விவசாயிகளிடமிருந்து ஆவணங்களை அதிகாரிகள் பெற்றதால் தனிமனித சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது உள்ளிட்ட அரசு விதியை அதிகாரிகள் காற்றில் பறக்க விட்டனர்.

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று மூன்றாம் அலை தொடங்க உள்ளதாக மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் இதுபோன்று கூட்டம் நடத்திய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil