கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன்; விவசாயிகளுக்கு வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் நகைக்கடன்களை கடந்த அதிமுக ஆட்சியில் தள்ளுபடி செய்திருந்தது. இதற்கான அறிவிப்பு மற்றும் கடன்களின் விபரங்கள் அந்தந்த கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒட்டப்பட்டிருந்து.
மேலும், பயிர் கடன் தள்ளுபடி ரசீதை விவசாயிகள் அனைவரும் பெற்று வந்தனர். ஆனால், நகைக்கடன்கள் சிட்டா மற்றும் அடங்கல் கொடுத்து ( 5 சவரன் வரை) கடன் வாங்கியது மட்டும் தள்ளுபடி எனவும், சிட்டா அடங்கல் அல்லாத நகைக்கடன் கூட்டுறவு கடன் சங்கங்களில் கூறப்பட்டு வருகிறது.
இதனால், விவசாயிகள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். தற்போதுள்ள ஆட்சியிலாவது நகைக்கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என எதிர்ப்பார்ப்பில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த சில நாட்களாக விவசாயிகளுக்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் அந்தந்த சங்கங்களில் நிலத்திற்கு உண்டான ஆவணம், ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களை கொடுத்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்புழுதியுர் எச்எச் 611 கூட்டுறவு கடன் சங்கங்கத்தின் சார்பில், தகவல் பலகையில் துண்டறிக்கை ஒட்டப்பட்டுள்ளது. அதில், விவசாயிகள் பயிர்கடன் பெற அலுவலகத்தை அணுகுமாறும், தங்களது விவசாய நிலத்திற்கான உரிய ஆவணங்களை எடுத்துவந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பயிர் செய்வதற்கு ஏதுவாக பயிர் கடன்கைள அளிப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu