திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு
X

அமைச்சர் எ. வ. வேலுவிற்கு வெள்ளிவேல் வழங்கிய  திருவண்ணாமலை நகர மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா கார்த்தி வேல்மாறன்

திருவண்ணாமலை நகர மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா கார்த்தி வேல்மாறன், அமைச்சர் எ. வ. வேலுவிற்கு வெள்ளிவேல் வழங்கி ஆசி பெற்றார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி தலைவருக்கான தேர்தல் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் 10வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜலால் , அதிமுக சார்பில் 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அம்பிகா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் மொத்தமுள்ள இருபத்திநான்கு வாக்குகளில் திமுகவை சேர்ந்த ஜலால் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அம்பிகா 6 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற ஜலால் அவர்கள் வந்தவாசி நகர மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரணி நகராட்சி தலைவராக ஏசி மணி 20 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போளூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ராணி சண்முகம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் கானா சுதா முருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெரணமல்லூர் பேரூராட்சி தலைவராக வேணி ஏழுமலை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் பேரூராட்சியில் செல்வபாரதி 13 வாக்குகள் பெற்று பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil