மணிலா பயிரில் விதைப்பண்ணை அமைக்க உதவி இயக்குனர் அழைப்பு

மணிலா பயிரில் விதைப்பண்ணை அமைக்க உதவி இயக்குனர் அழைப்பு
X

மணிலா பயிர் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா பயிரில் விதைப்பண்ணை அமைக்க மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் அழைப்பு

மணிலா பயிரில் விதைப்பண்ணை அமைத்து இரட்டிப்பு லாபம் பெற விவசாயிகளுக்கு மாவட்ட விதைச்சான்றுஉதவி இயக்குனர் மலர்விழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மாவட்டத்தில் மணிலா பயிர் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் அதிக பரப்பில் விதைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் விவசாயிகள் விதை பண்ணை அமைப்பதற்கு தேவையான மணிலா பயிரின் விதை மற்றும் ஆதார நிலை விதைகளை அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெறலாம்.

விதை பண்ணை அமைக்க விதை வாங்கியதற்கான விற்பனை ரசீது மற்றும் சான்று அட்டை மிக முக்கியம் . விதைகளை விதைப்பதற்கு முன் மணிலா ரைசோபியம் நுண்ணுயிர் பாக்கெட்டை ஆரிய வடிகட்டிய கஞ்சியும் கலந்து நிழலில் உலர்த்திய பின்பு விதைக்கவும். விதைத்த 30 நாட்களுக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி விதைப்பண்ணையை பதிவு செய்ய வேண்டும்.

விதைச்சான்று அலுவலர்கள் விதைத்த 60வது நாள் மற்றும் 90வது நாள் என இரண்டு முறை ஆய்வு செய்வார்கள். பின்னர் மூன்றாவதாக 135 நாட்களுக்குள் மணிலா விதைகளை ஆய்வு செய்வார்கள். மேற்கண்ட வயல்களில் ஆய்வின்போது களைகள் ஏதாவது இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

மணிலா பயிரில் அடியுரமாக ஏக்கருக்கு 8 கிலோ மற்றும் விதைத்த 45வது நாள் மேலுரமாக 20 கிலோ என மொத்தம் 120 கிலோ ஜிப்சம் இட வேண்டும். இதனால் அதிக மகசூல் கிடைக்கும். மேலும் தகுதியான விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அரசு வழங்குவதால் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் என கூறியுள்ளார்

Tags

Next Story
ai in future agriculture