குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல்: கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்
திருவண்ணாமலை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்தை நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதன்படி 2,100 டன் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது.
திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் முதன்மை கொள்முதல் மையமாக செயல்படும். இந்த மையங்களில் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.63 வீதம் வருகிற 15-ந்தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய விவரங்களுடன் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu