ஆரணி அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

ஆரணி அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
X
ஆரணி அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் விக்னேஷ் (வயது 21). இவர் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சரிவர தொழில் நடத்த முடியாத காரணத்தாலும், இதனால் வருவாய் இல்லாததாலும் மதுபான பழக்கத்துக்கு அடிமையான விக்னேஷ், தினமும் குடி போதையில் வீட்டுக்கு வந்தார்.

இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மகன் விக்னேசை தாயார் துளசி, மதுபானம் குடிப்பதை நிறுத்தி விட்டு குடும்பம், தொழிலை கவனி எனக் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் அரையாளம் கிராமத்தில் மதுபானத்தில் விஷத்தை கலந்து குடித்து மயக்கமடைந்து கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, விக்னேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்