ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
விபத்தில் பலியான திருமால்
ஆரணியை அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமதாசின் மகன் திருமால் (வயது 28). இவர், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர், தினமும் கிராமத்தில் இருந்து பைக்கில் ஆரணிக்கு வந்து, அங்கிருந்து தனியார் நிறுவன பஸ்சில் வேலைக்காக ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் திருமால் வேலைக்குச் செல்ல தனது பைக்கில் ஆரணியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, நடுக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வரும் சரவணன் என்பவர் பைக்கின் மீது திருமாலின் பைக் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு, டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே திருமால் இறந்து விட்டதாக கூறினர். சரவணனுக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து களம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu