பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் கைது

பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் கைது
X

பைல் படம்.

பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் சத்துவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 21), யூடியூப் சேனல் மூலம் செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவேற்றம் செய்து வந்துள்ளார். செல்வம் பதிவு செய்து வந்த வீடியோக்களை ஆரணி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவி தினமும் பார்த்து பதில் போட்டு வந்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஆரணி வந்த செல்வம் கடந்த 29-ந் தேதி பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்திச் சென்றுள்ளார். தேர்வு எழுத சென்ற மகள் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் மாணவியின் செல்போன் மூலம் துப்புதுலக்கினர். அவர் ஜெயங்கொண்டம் அருகே இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஜெயங்கொண்டத்திற்கு விரைந்து சென்று இருவரையும் நேற்று ஆரணிக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மாணவியை வாலிபர் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது. இதையடுத்து மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை உணர்த்தி செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பள்ளி மாணவியை சமரசம் செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

செய்யாறில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த நிதிநிறுவன உரிமையாளர் கைது:

செய்யாறில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த நிதிநிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மற்றொரு உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தேவன் (வயது 42). இவர் செய்யாறில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான திட்டத்தினால் கவரப்பட்டு ஏஜெண்டாக பணிபுரிந்து பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து தனியார் நிறுவனத்தில் செலுத்தி உள்ளார்.

அதன்படி 44 நபர்களிடம் பணம் வசூல் செய்து ரூ.11 லட்சத்து 43 ஆயிரம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் திடீரென நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்தேவன் தனியார் நிதி நிறுவன உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து தனியார் நிதி நிறுவன உரிமையாளர் சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தனியார் நிதி நிறுவன மற்றொரு உரிமையாளர் ராஜகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்