16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது
X
ஆரணி அருகே 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அப்பகுதியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 23வயதுடைய இளைஞர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி தனது தாயாரிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் தாயார் ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!