/* */

கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது

ஆரணி அருகே கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது
X

கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவா.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் உதயகுமார் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று ஆரணி - வாழைப்பந்தல் சாலையில் உள்ள பாறைகுளம் அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, உதயகுமாரிடமிருந்து 6,000 ரூபாயை பறித்து சென்றார்.

இது சம்பந்தமாக உதயகுமார் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புகழ், சப்- இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வழிப்பறி செய்த நபர் பையூர் சுடுகாட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மேற்பார்வையில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், நந்தகுமார், முருகன் மற்றும் போலீசார் சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஆரணி வராகமூர்த்தி தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மகன் சிவா (21) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து 4 பவுன் செயின், மோட்டார் சைக்கிள், ரூ.2,000 பறிமுதல் செய்தனர். இவர் பல்வேறு வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?