ஆரணி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

பைல்படம்.
Latest Suicide News -திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர், முள்ளிப்பட்டு ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராகவும், மற்ற நேரத்தில் நெசவுத்தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இவரின் மனைவி செல்வி (வயது 45). இவர்களுக்கு நவீன்குமார் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் ரவிக்கும், செல்விக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த செல்வி வீட்டில் மண்எண்ணெய்யை உடலில் உற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் கூச்சலிட்டு அலறினார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் செல்வியை மீட்டு தீக்காயத்துடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் செல்வி வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் ரவி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu