குடும்ப பிரச்னை: பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்ப பிரச்னை: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
X
ஆரணி அருகே கணவர் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குருகுலம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா (வயது 26). இவருக்கும், அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த செல்வரசு என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கும் லாவண்யாவிற்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலுடன் லாவண்யா மாயமானார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் செல்வரசு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் அழைத்து பேசியதில், ராணுவ வீரர் கூட தான் வாழ்வேன் என கூறி எழுதி கொடுத்துவிட்டு லாவண்யா சென்னையில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ராணுவ வீரர் பணிக்கு சென்றுவிட்டதால் அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே செல்வரசு, லாவண்யாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் விரக்தி அடைந்து, த தன் தாய் வீடான குருகுலம் வீட்டிற்கு வந்து வசித்து வந்த லாவண்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்