ஆரணி அருகே வீட்டில் மாந்திரீகம்: கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீஸ்

ஆரணி அருகே வீட்டில் மாந்திரீகம்: கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீஸ்
X

பேய் பிடித்ததாக கூறப்படும் பெண் கோமதி.

Arani District -வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு மாந்திரீகம் செய்தவர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று மீட்டனர்.

Arani District -திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தசரா பேட்டை பகுதியில் வீட்டை பூட்டிக் கொண்டு ஓரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மாந்தரீகம் செய்து கொண்டு இருந்தபோது ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கதவை அகற்றி அதிரடியாக சென்ற போலீசார், உள்ளே மாந்தரீகம் செய்து கொண்டு இருந்த நபர்களை அதிரடியாக வெளியேற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்குட்பட்ட தசராபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி வயது 55, நெசவு தொழிலாளி. இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், பூபாலன், பாலாஜி ஆகிய 2 மகன்களும், கோமதி என்ற மகளும் உள்ளனர்.

கோமதியை ஆறு மாதத்துக்கு முன், ஆரணி அடுத்த அரியாப்பாடியை சேர்ந்த பிரகாஷ், என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்..

இதில் பூபாலன் சென்னை தாம்பரம் ஆயுதப்படை போலீசில் வேலை செய்து வருகிறார். கோமதிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, தவமணி, காமாட்சி, பூபாலன், பாலாஜி, பிரகாஷ் மற்றும் கோமதி ஆகிய ஆறு பேரும், மூன்று நாட்களாக, தசராப்பேட்டையில் உள்ள வீட்டில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகம் செய்தனர்.

மஞ்சள், குங்குமம், பொம்மை மற்றும் சில சுவாமி படங்களை வைத்து மாந்திரீகம் செய்து கொண்டிருந்த தகவல் அக்கம்பக்கத்திற்கு தெரியவந்ததால், போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து கதவை திறக்குமாறு கூறினர்.

இதையடுத்து தாசில்தார் ஆர்.ஜெகதீசன், தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் படை வீரர்களும் சென்றனர். ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

சுமார் 5 மணி நேரம் போராடியும் அவர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வராமல் இருந்தனர்.

அவர்களை வெளியே வருமாறு அழைத்த போது நாங்கள் மாந்திரீகம் செய்து கொண்டிருக்கிறோம் எங்கள் பூஜையை தடை செய்தால் வீண் பழிக்கு ஆளாவீர்கள் நீங்கள் வெளியே செல்லுங்கள் என அதிகாரிகளையும் போலீசாரையும் உள்ளிருந்து மிரட்டும் தொனியில் குரல் கொடுத்தனர் .

அவர்கள் கதவை திறக்காததால், தீயணைப்பு துறையினர் மற்றும் அதிரடிப்படை போலீசாரை வரவழைத்து, பொக்லைன் இயந்திரத்தால், கதவை உடைத்து மீட்க முயன்றனர்.

நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு முன் கதவை உடைத்து வீட்டின் உள்ளே இருந்த 6 பேரையும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்டனர்.

அப்போது, பூபாலன், பிரகாஷ் ஆகிய இருவரும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது வெளியே வந்த அவர்கள், கோமதிக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதனால் மாந்திரீகம் மூலம் அவருக்கு பேய் விரட்டும் பூஜை நடத்தி வருவதாகவும் கூறினர். இந்த பூஜையை கோமதியின் கணவர் பிரகாஷ் செய்து வந்தார்.

இதற்கிடையே போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் வீட்டில் பூஜையில் வைக்கப்பட்டு இருந்த பொம்மை உள்ளிட்ட பொருட்களை வெளியே கொண்டு வந்து போட்டு தீயிட்டு கொளுத்தினர்.

ஆறு பேரையும் போலீசார் மீட்டபோது, அவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடந்து கொண்டனர். அவர்களை ஆரணி அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story