திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதை வருமா? மக்கள் எதிர்பார்ப்பு
பைல் படம்
Tindivanam to Tiruvannamalai Train-ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை புதிய இரயில் பாதை அமைக்கும் பணிக்கு நில ஆர்ஜிதம் சம்பந்தமாக கலந்தாய்வு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இரயில் பாதை அமைய உள்ள இடத்தின் சம்பந்தமான நில உரிமையாளர்களிடம் அவர் கருத்து கேட்டார்.
திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி செய்யாறு ஆரணி வாலாஜா வழியாக நகரி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடங்குவதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது இது சம்பந்தமாக கருத்து கேட்டு கூட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில் ரயில் பாதை அமைய உள்ள இடம் சம்பந்தமான நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்டுக் கொண்டார்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 கிராமங்களில் உள்ள நிலங்கள் வழியாக ரயில்வே பாதை அமைகிறது இதில் 30 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 3 கிராமங்களில் உள்ள நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது நில மதிப்பீடு குறித்து சில உரிமையாளர்களிடம் தகவல் தெரிவித்து அவர்கள் கூறுகின்ற கருத்துக்களை ஏற்று அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நிவாரணத் தொகை அவர்களுக்கு வழங்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில் இப்பணி முடிவடையும்.
அதன் பிறகு அதாவது டிசம்பர் மாதம் ரயில் பாதை பணி துவங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் இப்பணி வேகமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து டவுன் பிளானிங் கமிட்டி கூட்டம் குறித்து கேட்டதற்கு அடுத்த மாதம் ஆரணியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் சுந்தர், ஜெகதீசன் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் பெருமாள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை திண்டிவனம் ரயில் பாதை வருமா மக்கள் எதிர்பார்ப்பு
திருவண்ணாமலை திண்டிவனம் ரயில் பாதை எப்போதும் நிறைவடைவது என மாவட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மத்திய அரசு 2007- 2008 நிதியாண்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. 71 கிலோ மீட்டர் ரயில்வே பாதை திட்டத்தில் 8 இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமைய உள்ளது என அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு 227 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு நிறைவடையும் என திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு 662 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. கடந்த ஆட்சியில் வெறும் 62 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தி மாநில அரசு மத்திய அரசுக்கு வழங்கியது. இத்திட்டத்திற்காக திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ரயில் பாதை திட்ட தனி வட்டாட்சியர் குழுவும் அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது அந்தக் குழு தற்காலிகமாக பணிகளை நிறுத்தியுள்ளது. கடந்த 20- 21ஆம், ஆண்டு ரூபாய் 100 கோடி மட்டுமே ரயில்வே பட்ஜெட்டில் மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு முழுமையாக நிலத்தை கையகப்படுத்தி தராததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் திருவண்ணாமலை திண்டிவனம் ரயில் பாதை பணிகள் நடைபெற வேண்டும், அதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என பேசியும் எழுதியும் வந்துள்ளார். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போதும் அவர் பேசுகையில், திருவண்ணாமலை ஆன்மீக நகரம் எனவே ஆன்மீக நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்வே திட்டங்கள் அமைக்கப்பட்டு அதில் திருவண்ணாமலையையும் இணைத்து வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பயணிகள், பௌர்ணமிக்கு வரும் பக்தர்கள், மிகவும் பயன் பெறுவார்கள். அதுமட்டுமல்லாது செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர், ஆகிய பகுதிகளில் வியாபாரம், வேலை வாய்ப்பு பெருகும். மக்கள் நலன் கருதி இத்திட்டம் நிறைவு அடைய மத்திய-மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டும் என பொது மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu