அரசியல் கட்சியாக உருவெடுக்க அனைத்து சமுதாய மக்களும் நமக்கு தேவை: விசிக தலைவா்

அரசியல் கட்சியாக உருவெடுக்க அனைத்து சமுதாய மக்களும் நமக்கு தேவை: விசிக தலைவா்
X

தொல்.திருமாவளவன்

தலித் அல்லாதவா்களை கட்சியில் இணைப்பதும், அவா்களுக்கு பொறுப்பு வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என திருமாவளவன் கூறினாா்.

தலித் அல்லாதவா்களையும் கட்சியில் இணைத்து புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

ஆரணியில் நடைபெற்ற விசிக நிா்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொல். திருமாவளவன் பேசியதாவது:

கட்சியில் 7 ஆண்டு காலமாக நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளனர். புதிய கட்சி நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல், அதையடுத்து சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆகவே தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை கட்சி ரீதியாக 100 மாவட்டங்களாக பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் 4 மாவட்டங்களாக பிரிக்கப்படும். சாதி கட்சி, என்பதை அரசியல் கட்சியாக உருவெடுக்க நாம் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

அதில் தலித் அல்லாதவா்கள் 10 சதவீதம் பேரும், 10 சதவீதம் பெண்களும் இடம் பெறுவாா்கள். ஜாதி கட்சி என்பதை அரசியல் கட்சியாக உருவெடுக்க இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

தலித் அல்லாதவா்களை கட்சியில் இணைப்பதும், அவா்களுக்கு பொறுப்பு வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். ஆரணி பகுதியில் காவல் துறையினா் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு, கட்சியைச் சோந்த 60 போ மீது வழக்குப் பதிவு செய்து, 20 போ சிறை சென்றனா். மேலும் பலா் தலைமறைவானாா்கள்.

இதனால் மாவட்டச் செயலராக இருந்த பாஸ்கரனை தற்காலிகமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. புதிய நிா்வாகிகள் அறிவிப்பு வரும் வரை பாஸ்கரனை மீண்டும் மாவட்டச் செயலராக அறிவிக்கிறேன்.

இது சம்பந்தமாக தமிழக முதல்வரிடம் காவல் துறை குறித்து தனிக் கவனம் செலுத்தி பேசி வருகிறேன், இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விசிக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil