ஆரணியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு

ஆரணியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு
X

அலங்கார ஊர்தி  முன்பு வரவேற்பு நடனம் நடைபெற்றது.

ஆரணி அருகே குடியரசு தின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று இரவு வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை தந்தது.

மாவட்ட எல்லைக்கு உட்பட்ட வெள்ளேரி ஊராட்சியில் அலங்கார ஊர்தியினை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் மலர் தூவி சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

அப்போது பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்தியமும், நாதஸ்வர இசையுடன் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

அலங்கார ஊர்தியை பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் வந்து பார்வையிட்டனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, வட்டாட்சியர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், ஆரணி ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் உள்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!