சேத்துப்பட்டு நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

சேத்துப்பட்டு நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
X
சேத்துப்பட்டு நெல் சேமிப்பு கிடங்கை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நெல் கொள்முதல் சேமிப்பு குடோனை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடந்த ஒரு வாரகாலமாக திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ்க்கு விவசாயிகளிடமிருந்து வந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அதிகாரிகளிடம் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க தார்பாய் போட்டு பாதுகாக்கவும் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மண்டல மேலாளர், கோபிநாத், தர கட்டுப்பாட்டு மேலாளர் அரங்கநாதன், மற்றும் கண்காணிப்பாளர்கள் விவசாயிகள், உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!