ஆரணியில் விநாயகா் சிலை விசா்ஜன ஊர்வலம்
ஆரணியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விநாயகா் சிலை விசா்ஜன ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் ஆரணியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் வந்தவாசி நகரின் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகளை கரைப்பதற்காக புதன்கிழமை பிற்பகல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் வழிப்பட்டு வந்தனர். இந்நிலையில், ஆரணி டவுன் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் 5ம் நாள் நிறைவாக நேற்று விநாயகர் சிலைகள் விஜர்சனம் நடைபெற்றது.
நகரில் பல்வேறு இடங்களில் வைத்து வழிபடப்பட்ட அனைத்து விநாயகா் சிலைகளும் அண்ணா சிலை அருகே கொண்டு வரப்பட்டன.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசா்ஜன ஊா்வலத்துக்கு, இந்து முன்னணி மாவட்டச் செயலா் தாமோதரன், வேலூா் மண்டல பொறுப்பாளா் மகேஷ்ஜி ஆகியோா் தலைமை வகித்தனா்.
பாஜக முன்னாள் நிா்வாகி கோபி, இந்து முன்னணி நகர நிா்வாகிகள் முத்து, லோகு, பாஸ்கரன், கோபி, வினோத், வெங்கடேசன், விக்கி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விக்னேஷ், மத்திய அரசு வழக்குரைஞா்கள் பிரிவு மாநிலச் செயலா் ரத்தினகுமாா், தொழிலதிபா்கள் அஸ்வந்த்பாபு, கோகுலகிருஷ்ணன் ஆகியோா் விநாயகா் சிலை ஊா்வலத்தை தொடங்கிவைத்தனா்.
தொடர்ந்து, மேள தாளத்துடன் இந்து முன்னணியினர் மற்றும் சிறுவர்கள் பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆரணி டவுன் அண்ணாசிலையில் தொடங்கி புதிய, பழைய பஸ்நிலையம், காந்திசாலை, வடக்குமாட வீதி, பெரியக் கடை வீதி, எம்ஜிஆர் சிலை, பெரிய கடை வீதி, சத்தியமூர்த்தி சாலை, பையூர் செல்லும் சாலை வழியாக வாழப்பந்தல் செல்லும் சாலை வரை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, சிலம்பாட்டம், கேரள செண்டை மேளத்துடன், நாடகக் கலைஞா்கள் பல்வேறு வேடமணிந்து உடன் சென்றனா்.
தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் இந்து முன்னணியினர் பையூர் பாறை குளத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தின் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏடிஎஸ்பி சிவானுபாண்டியன் தலைமையில் டிஎஸ்பிகள் ரவிச்சந்திரன், சின்ராஜ், மணிமாறன், ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கம், விநாயகமூர்த்தி, மகாலட்சுமி, பிரபாவதி, ஜீவராஜ்மணிகண்டன், சண்முகம் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று, அங்குள்ள ஏரி, கிணறுகள், குளங்களில் கரைக்கப்பட்டது. இதில், எஸ்ஐ சுந்தரேசன், தனிபிரிவு போலீசார்கள் ஜோதி, வினோத் மற்றும் இந்து முன்னணியினர், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu