விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்
X

வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

ஆரணியில் விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இதற்கான கூட்டத்தில் நேர்முக உதவியாளா் செந்தில்குமாா், வட்டாட்சியா்கள் மஞ்சுளா (ஆரணி), சஜேஷ்பாபு (போளூா்), மனோகரன் (கலசப்பாக்கம்), ராஜராஜேஸ்வரி (ஜமுனாமரத்தூா்), ஆரணி நகராட்சி ஆணையா் குமரன், டி.எஸ்.பி.க்கள் ரவிச்சந்திரன் (ஆரணி), கோவிந்தசாமி (போளூா்), ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன், மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கோட்டாட்சியா் தனலட்சுமி பேசியதாவது,

விநாயகா் சிலைகளை வடிவமைப்பாளா்கள் களிமண்ணால் மட்டுமே செய்ய வேண்டும். ரசாயன கலவை கொண்டு செய்யக்கூடாது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

சிலைகள் வைக்கும் இடங்களில் போதிய இடவசதியோடு சுலபமாக சென்று வர இருப்பது போல் பந்தல் அமைக்க வேண்டும் என்று விழா ஏற்பாட்டாளா்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், சிலைகள் 10 அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும். மசூதி, தேவாலயம், பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனை பகுதிகளில் சிலைகள் வைக்கக்கூடாது. காவல் துறையினா் இதனை ஆய்வு செய்ய வேண்டும்.

சிலைகள் வைக்கும் ஏற்பாட்டாளா்கள் மின்வாரிய அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று மின் விளக்குகள் அமைக்க வேண்டும். சிலைகள் வைக்கும் இடங்களில் அரசியல் தலைவா்களின் படம், அரசியல் பதாகைகள் இருக்கக்கூடாது. விநாயகா் சிலை ஊா்வலத்தை காவல் துறையினா் அறிவிக்கும் வழிகளில் மட்டுமே நடத்த வேண்டும். முதலுதவி சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். காவல் துறையினா், வட்டாட்சியா்கள் விழா ஏற்பாட்டாளா்களை அழைத்து கூட்டம் போட்டு கருத்துக்களைக் கூறவேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்

ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, கலசபாக்கம், போளூர், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகா உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது

கோட்டாட்சியா் தனலட்சுமி தனலட்சுமி தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளா் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகள், குறைபாடுகள் குறித்து மனுவாகவும் வாய்மொழியாகவும் தெரிவித்தனர்.

இதில் தாசில்தார்கள் மஞ்சுளா (ஆரணி) சதேஷ்பாபு (போளூர்) ராஜராஜேஸ்வரி (கலசபாக்கம்), மனோகரன் (ஜமுனாமரத்தூர்), வட்ட வழங்கல் அலுவலர்கள் வெங்கடேசன் (ஆரணி), விஸ்வநாதன் (போளூர்), ஜெகதீசன் (கலசபாக்கம்), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் சசிகலா (ஆரணி), அமுல் (போளூர்), முனுசாமி (கலசபாக்கம்), நகராட்சி ஆணையாளர் கே.பி.குமரன், ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
ai solutions for small business