அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
அடிப்படை வசதி கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளது
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் வந்தவாசி நெடுஞ்சாலையில் திடீரென சாலையில அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி வட்டாட்சியர் பெருமாள், காவல் ஆய்வாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கஇந்திராணி மற்றும் அலுவலர்கள்,சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பகுதிக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் சாலை வசதி, கால்வாய் வசதி அமைக்கவும், குடிநீர் வசதிக்காக புதிதாக ஆழ்துளை அமைக்கவும், தொகுதி மேம்பாட்டு நிதி, ஒன்றிய பொது நிதியிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகளும், எம்.எல்.ஏ.வும் உறுதியளித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu