ஆண்களுக்கான கருத்தடை குறித்த விழிப்புணர்வு

ஆண்களுக்கான கருத்தடை குறித்த விழிப்புணர்வு
X
சேத்துப்பட்டு மருத்துவ வட்டத்தில் ஆண்களுக்கான கருத்தடை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறையின் சார்பில், நவ. 21 முதல் டிச.4 வரை ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை, இருவார விழா நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து சேத்துப்பட்டு மருத்துவ வட்டத்தில் ஆண்களுக்கான கருத்தடை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார தலைமை மருத்துவர் மணிகண்டபிரபு பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நவீன வாசக்டமி மூலம் ஆண்களுக்கு வலியின்றி கருத்தடை சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சைக்கு உணவு கட்டுப்பாடு அவசியம் இல்லை. பக்கவிளைவு இல்லை. இயல்பாக வீட்டுக்கு செல்லலாம் என தெரிவித்தார்.

வருகிற டிசம்பர் 4ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. முகாமில் விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களும் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!