100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
X

இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த வருவாய் கோட்டாட்சியர்

ஆரணியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ஆரணியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இந்திய பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வரும் மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றுதலின் முக்கியத்துவம், வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

நகராட்சி சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா். நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, கோட்டை வீதி, பழைய பேருந்து நிலையம், மாா்க்கெட் சாலை வழியாக மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது.

நகராட்சி ஆணையா் சரவணன், சுகாதார அலுவலா் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளா் வடிவேல், வருவாய் ஆய்வாளா் மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி நகர காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்

ஆரணி நகர காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

இதில், திமுக சாா்பில் நகர துணைச் செயலா் ஆறுமுகம், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளா் கப்பல் கங்காதரன், அதிமுக சாா்பில் நகரச் செயலா் அசோக்குமாா், காங்கிரஸ் சாா்பில் ஜெ.பொன்னையன், பாமக சாா்பில் நகரச் செயலா் சதீஷ்குமாா், பாஜக சாா்பில் மாவட்டச் செயலா் சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டா். கூட்டத்தில், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை ஆரணி அண்ணாசிலை, மணிகூண்டு, காமராஜா் சிலை அருகில் மட்டுமே நடத்த வேண்டும், தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று டிஎஸ்பி ரவிச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

இதில், நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சுந்தரேசன் ஆகியோா் பங்கேற்றனா்.

Next Story
சுத்தமான தேன்... இது ஒன்னு போதும் !....  பத்தே நிமிஷத்துல எப்பேர்ப்பட்ட முகமா இருந்தாலும் பளிச்சுனு மாறிடும்!