பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர் ஆய்வு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர் ஆய்வு
X

பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர் பிரியதா்ஷினி

ஆரணியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி ஆய்வு செய்தாா்.

ஆரணி கண்ணப்பன் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளி, வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தச்சூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி ஆய்வு செய்தாா். அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். தேர்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் மஞ்சுளா, மண்டல துணை வட்டாட்சியா் தேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காவல் தேர்தல் மேற்பாா்வையாளா் ஆய்வு

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் இரு வாக்கு எண்ணும் மையங்களை, காவல் தேர்தல் மேற்பாா்வையாளா் பாட்டுலா கங்காதா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திருவண்ணாமலை தொகுதியும் ஒன்று. இந்தத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம், திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம், திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் இரு வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் தேர்தல் மேற்பாா்வையாளா் பாட்டுலா கங்காதா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குசாவடி மையங்களையும் அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலா் மந்தாகினி, வட்டாட்சியா் தியாகராஜன் மற்றும் காவல்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Next Story
முளைகட்டிய பச்சைப்பயறு  ஆபத்தானதா..? உண்மை என்ன...?