கார்கில் போரில் இறந்தவர்களுக்கு ஆரணி நினைவு தூணில் அஞ்சலி
கார்கில் நினைவுத்தூண் முன்பு மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் வட்டார முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் மற்றும் களம்பூர் அறிவு கோவில் இணைந்து கார்கில் போர் வெற்றி விழாவை முன்னிட்டு களம்பூர் பேரூராட்சியில் 5 கிலோ மீட்டர் கொண்ட மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. சங்கத்தலைவர் சுபேதார் ப.சுப்பிரமணியன் வரவேற்றார். மினிமாரத்தானை களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.விநாயகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் களம்பூர் பேரூராட்சி தலைவர் கே.டி.ஆர்.பழனி, ஊர் நாட்டாமை பூபாலன், பேரூராட்சி செயல் அலுவலர் ச.லோகநாதன், துணைத்தலைவர் அகமதுபாஷா, அறிவுக்கோவில் நிர்வாகி வி.முரளி, தலைவர் ஜே.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். முடிவில் சங்க செயலாளர் டி.எம்.சரவணன் நன்றி கூறினார்.
ஆரணி ரெட் கிராஸ் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக கார்கில் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்து நிர்வாகிகள் மலர் வளையத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று ஆரணி கோட்டை மைதானத்தில் உள்ள கார்கில் நினைவுத்தூண் முன்பு மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் ரெட்கிராஸ் சங்கத் தலைவர் குருராஜாராவ், செயலாளர் சண்முகம், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சர்மா, நெல் அரிசி வியாபாரிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.நடராஜன் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu